Sunday, August 12, 2012

புதிர் 5

இந்த முறை அதே புதிர்தான். சற்றே வித்தியாசமான முறையில் புதிர்களாக இருக்கிறது.இந்தப் புது முயற்சியின் நிறை குறைகள் வரவேற்கப்படுகின்றன. இனி புதிர்கள்...

1. உங்கள் குடும்ப பிரச்சினை தீர்த்து வைக்க ”நான்” வர வேண்டுமா?

2. ”என்” வீட்டில் என்னை தேடுகிறார்களே!

3. உன்னோடு விளையாடுவதற்கும் “ நான்”தான் வேண்டுமா?


இவை மூன்றும் மூன்று பாடல்கள். மூன்று பாடல்களிலும் உள்ள ”நான்”  “என்” போன்றவை ஒரே வார்த்தைதான். அதைக் கண்டு கொண்டால் பாடல் புதிர்களின் விடைகள் தானே வரும்.

அது சரி ”நான்” யாரென்று தெரியவேண்டாமா? ”என்னை”ப் பற்றி பாடாத கவிகளே இல்லை.



புதிர் 4 விடை: ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே கான்ச்சு போச்சுடா
                              இந்த ஊரும் புடிக்கல உலகம் புடிக்கல........
                               படம்: இதயம்.

இதற்கு விடை அளித்த 10அம்மா, அந்தோணி, சின்ன கனி, ஸ்ரீதேவி, யோசிப்பவர், சாந்தி, ராஜேஷ் துரைராஜ், மற்றும் அனிதா ஆகியோருக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள். 

7 comments:

  1. பெண்ணையும் நிலவையும் தான் கவிஞர்கள் அதிகம் பாடியிருக்கிறார்கள், இதில் தேடும் எனப் பார்த்தால் பெண் எனத் தோன்றுகிறது, ஆனால் பெண்னுக்குத்தான் எத்தனை பெயர்கள்.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் கண்டுபிடித்து விடலாம்.

      Delete
  2. நான் என்பது பாடல் வரிகளில் உள்ள ஒரு வார்த்தை. ஆனால் அது ”நான்” அல்ல. நான் யார் அல்லது என்ன வார்த்தை என்பதற்கும் குறிப்பு கொடுத்துள்ளேன். அந்த வார்த்தை கொண்டு அமைந்த பாடல்கள்தாம் அவை மூன்றும்.

    ReplyDelete
  3. ரெம்ப டிப்பிக்கல்ட்டா இர்க்கு!! குளுப் ப்ளீஸு!!

    ReplyDelete
    Replies
    1. நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனாலும் 2 பேர் விடை கூறி விட்டனர். இருப்பினும் வாசகர்களின் விருப்பத்திற்காக ஒரு குறிப்பு தருகிறேன்.

      குறிப்பு: “நான்”தான் நிலா.

      Delete
    2. உங்கள் விடை சரியே.

      Delete
  4. 10 அம்மா, ஸ்ரீதேவி உங்கள் விடைகள் சரியே.

    ReplyDelete