Thursday, October 25, 2012

புதிர் 11

வணக்கம்,

                   என் காலதாமதத்திற்கு வருந்துகிறேன். இனி புதிர்...

1. ஆக மொத்ததில் பெண்களுக்கு தூக்கமே கிடையாதா?

2. ஒரு பைத்தியகார பெண்ணுக்கு கூட தாலாட்டு வேண்டுமாம்!!

3. தன் ’தெய்வமகளு’க்கு அப்பாவின் தாலாட்டு என்ன?

என்ன பாடல்கள்?


புதிர் 10 விடைகள்: 1 அழகிய மிதிலை நகரினிலே... (அன்னை)
                                       2 செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்.. (முள்ளும் மலரும்)
                                       3 பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்...(பையா)

ஒற்றுமை: அனைத்துப் பாடல்களும் காரில் சென்றவாரே பாடும் பாடல்கள்.

இதற்கு அனைத்து விடைகளையும் சரியாக அனுப்பியவர்கள்: 10அம்மா, ஸ்ரீதேவி, Ramarao
 
சில விடைகள் மட்டும் அனுப்பியோர்: நாகராஜன், யோசிப்பவர், Madhav, Muthu

அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

Thursday, October 4, 2012

புதிர் 10

வணக்கம்,
                     சிறிய இடைவெளிக்குப் பின்னர் அனைவரையும் எதிர்கொள்ள ஆவலோடு வந்துள்ளேன். எனவே தாமதம் செய்யாமல் விடையளியுங்கள்.


1. அழகானதொரு ஊரில் சீதை யாருக்காக காத்திருக்காளோ?

2. தாழம்பூவில் வீசும் காற்று என் மீதும் பட்டது.

3. காற்றே, மலர் போல வந்தவள் இவள்.

வழக்கம் போலவே அனைத்து பாடல்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.
என்ன பாடல்கள்?