Wednesday, August 29, 2012

புதிர் 7

1. கடவுளுக்கும், பாப்பாவுக்கும் ஒரே குணம். அது என்ன பாட்டு?

2. தொட்டிலில் ஆட வந்த நிலவா நீ? அது என்ன பாட்டு?

3. நிலவு தேய்வதையும் ரசிக்க வேண்டுமாம். அது என்ன பாட்டு?




புதிர் 6 விடைகள்: 1. கல்யாண சமையல் சாதம்.....( மாயா பஜார் )
                                     2. என்ன சமையலோ.....(உன்னால் முடியும் தம்பி)
                                     3. நித்தம் நித்தம் நெல்லுச் சோறு.... நேத்து வச்ச மீன் குழம்பு                             என்ன இழுக்குதய்யா.....(முள்ளும் மலரும்)


இதற்கு விடை அளித்த, ramachandran vaithyanadan, anitha, shanthi, rajesh durairaj, 10அம்மா, முகிலன், யோசிப்பவர், ஸ்ரீதேவி, இன்னமுதம் ஆகியோருக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள். 

Tuesday, August 21, 2012

புதிர் 6

1. யாராவது பீமன் மகன் போல் சாப்பிட முடியுமோ? அம்மாடி! அது என்ன பாட்டு?

2. அண்ணனும் தங்கையும் சேர்ந்து எங்களாலும் சமைக்க முடியும் என நிரூபித்ததொரு பாடல், என்ன பாடல்?

3. முந்தின நாள் வச்ச வஞ்சிரம் குழம்புதான் அவங்களுக்கு புடிக்குமாம். அது என்ன பாட்டு?

புதிர் 5 விடைகள்

 ”நான்” - நிலா

1 வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையை.....(மிஸ்ஸியம்மா)
2 வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே.....(மெல்ல திறந்தது கதவு)
3 வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை.... (மின்சார கனவு)


அடுத்த புதிர் விரைவில் கொஞ்சம் எளிமையாக.....

Sunday, August 12, 2012

புதிர் 5

இந்த முறை அதே புதிர்தான். சற்றே வித்தியாசமான முறையில் புதிர்களாக இருக்கிறது.இந்தப் புது முயற்சியின் நிறை குறைகள் வரவேற்கப்படுகின்றன. இனி புதிர்கள்...

1. உங்கள் குடும்ப பிரச்சினை தீர்த்து வைக்க ”நான்” வர வேண்டுமா?

2. ”என்” வீட்டில் என்னை தேடுகிறார்களே!

3. உன்னோடு விளையாடுவதற்கும் “ நான்”தான் வேண்டுமா?


இவை மூன்றும் மூன்று பாடல்கள். மூன்று பாடல்களிலும் உள்ள ”நான்”  “என்” போன்றவை ஒரே வார்த்தைதான். அதைக் கண்டு கொண்டால் பாடல் புதிர்களின் விடைகள் தானே வரும்.

அது சரி ”நான்” யாரென்று தெரியவேண்டாமா? ”என்னை”ப் பற்றி பாடாத கவிகளே இல்லை.



புதிர் 4 விடை: ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே கான்ச்சு போச்சுடா
                              இந்த ஊரும் புடிக்கல உலகம் புடிக்கல........
                               படம்: இதயம்.

இதற்கு விடை அளித்த 10அம்மா, அந்தோணி, சின்ன கனி, ஸ்ரீதேவி, யோசிப்பவர், சாந்தி, ராஜேஷ் துரைராஜ், மற்றும் அனிதா ஆகியோருக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள். 

Thursday, August 9, 2012

புதிர் 4

கோடைன்னா  காயத்தான்  செய்யும். அதுக்காக ஊரே புடிக்கலன்றியேப்பா.

அது என்ன பாடல்?


புதிர் 3 விடை: குளிச்சா குத்தாலம் கும்பிட்டா பரமசிவம்
                               குடிச்சா நீர்மோரு புடிச்சா நீதான்டி 

சரியான விடை அளித்த அந்தோணி, ஸ்ரீதேவி, மற்றும் விஜய் ஆனந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

Monday, August 6, 2012

புதிர் 3

 நீராடி முடித்து ஈசனை வணங்கி பானகம் அருந்தி உன்னை கைப்பிடிப்பேன்

அது என்ன பாடல்?

Sunday, August 5, 2012

விடைகள்

புதிர்1: நலம் நலமறிய ஆவல்....

புதிர்2: தூங்காதே தம்பி தூங்காதே......

நன்றி

புதிர் 1 மற்றும் 2ல் நிறைய ஆர்வலர்கள் விடை அளித்திருந்தனர்.
அனைவருக்கும் நன்றி. புதிர் 3 விரைவில்....

Thursday, August 2, 2012

புதிர் 2

எம்.ஜி.ஆர்.க்கும், கமலுக்கும் தங்களின் "small brother"ஐ disturb செய்வதுதான் வேலையோ?

அது என்ன பாட்டு?

Wednesday, August 1, 2012

புதிர் 1

இரவினில் கனவுகள் தினம் தொல்லையே
உறக்கமே எனக்கில்லை கனவில்லையே


இப்பாடலின் முதல் வரி என்ன?

புதிர் பற்றி

இது சாதாரண புதிர்வகைதான்.
இங்கு தரப்படும் பாடல் பற்றிய கேள்விகளுக்கு விடை தர  வேண்டும்.
அவ்வளவே.

முதல் பதிவு

ஹாய்,
            இது பாடல் பிரியர்களுக்காக உருவாக்கப்பட்ட
ஒரு வலை.எனவே இது வரிகளின் வலை