Monday, November 5, 2012

புதிர் 11 விடைகள்

1. காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே....( சித்தி )

2. கண்ணே கலைமானே கன்னி மயிலென.....( மூன்றாம் பிறை )

3. ஆரிரோ ஆரிரோ இது தந்தையின் தாலாட்டு.... ( தெய்வத்திருமகள் )

Madhav அவர்கள் 2ஆவது பாடலுக்கு கனா காணும் கண்கள் மெல்ல...(அக்னிசாட்சி) என்ற பாடலையும் அனுப்பியிருந்தார். ஆனால் அதில் ஆரிரோ என்ற வார்த்தை இடம்பெறவில்லை என்றாலும் அந்தப் பாடல் என் குறிப்பிற்கு சரியாக அமைந்த படியால் அதையும் சரியான விடையாகவே  ஏற்றுக் கொள்கிறேன்.


இதற்கு சரியான விடையளித்தோர்:  Ramarao, Ramachandran Vaidyanathan, Arunthathi, Madhav, 10அம்மா, ஸ்ரீதேவி

சில விடைகள் மட்டும் அனுப்பியோர்: யோசிப்பவர், Renuka


இவர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

மேலும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

ஒளி வெள்ளம் தணிந்த பின் என் புதிர் வெள்ளம் ஓடும்.....

 

Thursday, October 25, 2012

புதிர் 11

வணக்கம்,

                   என் காலதாமதத்திற்கு வருந்துகிறேன். இனி புதிர்...

1. ஆக மொத்ததில் பெண்களுக்கு தூக்கமே கிடையாதா?

2. ஒரு பைத்தியகார பெண்ணுக்கு கூட தாலாட்டு வேண்டுமாம்!!

3. தன் ’தெய்வமகளு’க்கு அப்பாவின் தாலாட்டு என்ன?

என்ன பாடல்கள்?


புதிர் 10 விடைகள்: 1 அழகிய மிதிலை நகரினிலே... (அன்னை)
                                       2 செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்.. (முள்ளும் மலரும்)
                                       3 பூங்காற்றே பூங்காற்றே பூப்போல வந்தாள் இவள்...(பையா)

ஒற்றுமை: அனைத்துப் பாடல்களும் காரில் சென்றவாரே பாடும் பாடல்கள்.

இதற்கு அனைத்து விடைகளையும் சரியாக அனுப்பியவர்கள்: 10அம்மா, ஸ்ரீதேவி, Ramarao
 
சில விடைகள் மட்டும் அனுப்பியோர்: நாகராஜன், யோசிப்பவர், Madhav, Muthu

அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

Thursday, October 4, 2012

புதிர் 10

வணக்கம்,
                     சிறிய இடைவெளிக்குப் பின்னர் அனைவரையும் எதிர்கொள்ள ஆவலோடு வந்துள்ளேன். எனவே தாமதம் செய்யாமல் விடையளியுங்கள்.


1. அழகானதொரு ஊரில் சீதை யாருக்காக காத்திருக்காளோ?

2. தாழம்பூவில் வீசும் காற்று என் மீதும் பட்டது.

3. காற்றே, மலர் போல வந்தவள் இவள்.

வழக்கம் போலவே அனைத்து பாடல்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.
என்ன பாடல்கள்?

Friday, September 21, 2012

புதிர் 9 விடைகள்

1. சொட்டுனு சொட்டுனு சொட்டுது பாரு இங்கே...(ஆட வந்த தெய்வம்)

2. வான் மேகம் பூப்பூவாய் தூவும்...(புன்னகை மன்னன்)

3. விண்ணோடு மேளச்சத்த்ம் என்ன...(மழை)

இதற்கு சரியாக விடையளித்தவர்கள்: 10அம்மா, ஸ்ரீதேவி, ரேணுகா, Ramarao, Madhav ஆகியோருக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

முதல் பாடலை குறிப்பு இல்லாமல் கண்டுகொண்ட Muthu அவர்களுக்கும், 10அம்மா அவர்களுக்கும் சிறப்பு பாராட்டுகள்.

அடுத்த புதிரை சிறிது கால இடைவெளி விட்டு மீண்டும் தொடருவேன். அதுவரை தயவுசெய்து காத்திருங்கள்....

Wednesday, September 12, 2012

புதிர் 9

1. இங்கே மழை சொட்டுன்னுதான் கொட்டுமாம்.

2. ஆகாய பஞ்சுகள் பூ மாரி தூவுதாம்.

3. வானில் என்ன அது கொட்டுச்சத்தம்?

விடைகள்?


புதிர் 8 விடைகள்: 1.மச்சானைப் பாத்திங்களா? மல வாழ தோப்புக்குள்ள... (அன்னக்கிளி)
                                     2. கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு....(புது நெல்லு புது நாத்து)
                                     3. மச்சான் மீசை வீச்சருவா...(தில்)

இதற்கு சரியாக விடை அளித்த மற்றும் முயற்சி செய்த முகிலன், 10 அம்மா,  Anthony, G.L. Vignesh, Ramarao, Arun, Anitha, யோசிப்பவர், ரேணுகா, ஸ்ரீதேவி, முத்து ஆகியோருக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.  

Friday, September 7, 2012

புதிர் 8

1. எம் மாமன் மவன் வாழத் தோப்புல தொலஞ்சுப்ட்டான். செத்த கண்டுபுடிச்சி தாரீகளா?

2. அதுமட்டுமில்ல அவன் ஆளு கொஞ்சம் கருப்புதேன்.கொஞ்சம் கஞ்சாம்பட்டி.

3. அப்றம் அவன் மீசை கூட ஐய்யனாராட்டம் இருக்கும்.

கண்டுபுடிச்சுடுவீகளா?

Thursday, September 6, 2012

புதிர் 7 விடைகள்

1. குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று...(குழந்தையும் தெய்வமும்)

2.தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே...(சின்ன தம்பி)

3. நிலா காய்கிறது நிறம் தேய்கிறது.....(இந்திரா)


இதற்கு விடை அளித்த Ramachandran Vaidyanadan, Ramarao, Rajesh Durairaj, ஸ்ரீதேவி, யோசிப்பவர், 10 அம்மா, Anitha, Arun, shanthi ஆகியோருக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

புதிர் 8 விரைவில்...........